ஆன்மிகம்

Sabarimala: சபரிமலை தரிசனத்துக்கு செல்வோர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 80,000 பேர் மட்டுமே அனுமதி

Sabarimala: திருவனந்தபுரம் சபரிமலையில் மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது (sabarimala online booking) ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Sabarimala: சபரிமலை தரிசனத்துக்கு செல்வோர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 80,000 பேர் மட்டுமே அனுமதி

Sabarimala: சபரிமலை தரிசனத்துக்கு செல்வோர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 80,000 பேர் மட்டுமே அனுமதி
சபரிமலை தரிசனத்துக்கு செல்வோர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 80,000 பேர் மட்டுமே அனுமதி

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;

பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, ​​நீங்கள் யாத்ராவை மேற்கொள்ள விரும்பும் வழியைத் தேர்வுசெய்ய உங்களுக்கு விருப்பம் வழங்கப்படும்.

இம்முறை நிலக்கல் மற்றும் பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து முடிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button