லேட்டஸ்ட் நியூஸ்
madurai: ⚡ மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 16-ல் மின் நிறுத்தம் – முழு லிஸ்ட் உள்ளே!
madurai 📢 மின்வாரிய அறிவிப்பு (TNEB Power Cut Notice)
மதுரை: தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை மறுநாள் (டிசம்பர் 16, 2025, செவ்வாய்க்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
-
தேதி: டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
-
நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

📍 மின்தடை ஏற்படும் பகுதிகள் (முழு விவரம்)
| துணை மின் நிலையம் | மின்தடை ஏற்படும் பகுதிகள் |
| தனியாமங்கலம் துணை மின் நிலையம் | கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி. |
குறிப்பு: பொதுமக்கள் மின்வாரியத்தின் பராமரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணிகளைப் பொறுத்து, மின் விநியோகம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வழங்கப்பட வாய்ப்புள்ளது.



